தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நியூசிலாந்துக்கு மூன்று கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருளை கொரியர் மூலம் அனுப்ப முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ கிராம் சூடோபெட்ரின் போதை பொருளையும் பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.