ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அரசுப் பேருந்துகள் பழுதாகி நிற்பதும் அதனை பயணிகளே தள்ளிச் செல்வதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் சாயல்குடி பேருந்து நிலையத்தில் கிளம்ப தயாராக நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென பழுதானதால் அதனை பள்ளி மாணவர்கள் சிறிது தூரம் தள்ளிச் சென்றனர். அதன்பிறகு பேருந்தை ஓட்டுநர் இயக்கிச் சென்றார்.