நீலகிரி மாவட்டம், உதகையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிவதாகவும் , இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்லும் போது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.