நாட்டில் ஊழல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, யு.பி.எஸ்.சி தேர்வர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர்,
பெரிய கனவு காண்பது பெரிய பலம் என குறிப்பிட்டு திருக்குறளை மேற்கோள் காட்டினார். முழு முயற்சியுடன் எந்தவொரு வேலையை செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், அறிவுசார்ந்த ஆக்கப்பூர்வமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நிதி மேலாண்மை குறித்தும் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.