ஆண் போல் இருப்பதாக விமர்சனங்களுக்கு உள்ளான அல்ஜீரியா வீராங்கனை இமானே தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலீப், சீன வீராங்கனையான யாங்க் லியூவுடன் மோதினார்.
இதில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலே சீன வீராங்கனையை வீழ்த்தி இமானே வெற்றிப் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
முன்னதாக இவர் ஒரு போட்டியில் பங்கேற்கும் போது ஆண் போல் தோற்றமுடையவர் என விமர்சனங்களுக்கு உள்ளானர் என்பது குறிப்பிடதக்கது.