இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு, பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பத்தக்கம் வென்றுள்ள ஜப்பானின் ரே ஹிகுச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆடவர் 57 கிலோ பிரிவில் தங்கம் வென்ற ரே ஹிகுச்சி, கடந்த முறை டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், வெறும் 50 கிராம் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக, தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள முடிவை வினேஷ் போகத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் ரே ஹிகுச்சி கேட்டுக் கொண்டுள்ளார்.