சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில், யுஜிசி விதிகளை மீறி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ரஹ்மத்துல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார்,நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் புகார் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 6 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.