வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியால் அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலகுவதாக அறித்துள்ளார்.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பேராசிரியர் முகமது யூனுஸ் பதவியேற்ற நிலையில், வன்முறை சற்று குறைந்தது.
இந்நிலையில், வங்கதேச உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலக வேண்டுமென நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலகுவதாக அறிவித்தார்.