சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலின் வீட்டில் சி.பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய போது, சிலை கடத்தல்காரர்களுடன் இணைந்து பொன்.மாணிக்கவேல் சதியில் ஈடுபட்டதாக, அதே பிரிவில் பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காதர் பாட்ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இதை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன்.மாணிக்கவேலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.