வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன அடிப்படையிலான தாக்குதல்களை ஐநா எதிர்ப்பதாகவும், வங்கதேசத்தில் நிகழும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழலை ஐநா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.