உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ, நடப்பாண்டில் 2-வது முறையாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளது.
கலிபோர்னியாவில் சான் ஹொசே நகரைக் தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தும் வகையில், கூடுதலாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சிஸ்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 4-ம் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.