ஐபோன் 16 சீரிஸ் போன்களை ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதால், மேலும் உற்பத்தியை அதிகரிக்க சீனாவின் Foxconn நிறுவனம், கூடுதலாக 50 ஆயிரம் ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.
சீனாவின் Zhengzhou நகரில் உள்ள இந்த தொழிற்சாலையில் தான் 80 சதவீதம் ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு திறனோடு ஐபோன் 16 சீரிஸ் தயாரிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் இதற்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் 9 கோடி ஐபோன்களை தயாரிக்க Foxconn நிறுவனம் திட்டமிட்டுள்ளது.