ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத், 10 மணி நேரத்தில் சுமார் நான்கரை எடையை குறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தபோது, அமன் ஷெராவத்தின் எடை 57 கிலோவில் இருந்து 61 புள்ளி 5 கிலோவாக அதிகரித்துள்ளது.
57 கிலோ பிரிவில் மோதுவதற்காக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அவர் 56.9 கிலோவாக எடையை குறைத்துள்ளார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தான் வினேஷ் போகாத் தகுதி நீக்கம் செய்யட்டார்.