வினேஷ் போகத் வழக்கில் இன்று இரவுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.
100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்ட வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டுமென முறையிட்டார்.
வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இந்த விவகாரத்தில் இன்று இரவுக்குள் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.