ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று நாடு திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்நிலையில், நாடு திரும்பிய ஹாக்கி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தினரும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஹாக்கி வீரர்கள் நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தனர்.