திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே கிணற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
காட்டுப்புத்தூர் அருகே மேய்க்கல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கிணற்றில் சிசுவின் உடல் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பொதுமக்கள் உதவியுடன் சிசுவை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிசுவை வீசிச் சென்றது யார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.