டெல்லியில் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மழை பெய்ததால், அதிகாரிகள் தனக்கு குடை பிடிப்பதை பிரதமர் மோடி மறுத்தார்.
அனைத்து காலநிலையிலும் வளரக்கூடிய 109 பயிர் வகைகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். இதையொட்டி, டெல்லி வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மழை பெய்தது. அப்போது பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் குடைபிடிக்க வந்தனர்.
ஆனால், அதை மறுத்த பிரதமர் மோடி, தானே குடையைக் கையில் ஏந்தி, பிறரும் நனையாதவாறு காத்தார். முன்னதாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் நிகழ்ச்சியை ஒத்திவைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட போதிலும், விவசாயிகளின் நலன் கருதி, அதை ஏற்க பிரதமர் மோடி மறுத்தார்.