தேனியில் பெய்த கனமழை காரணாமாக 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த இரண்டாம் போக நெற்கதிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
பெரியகுளம், தாமரைக்குளம், ஜெயமங்களம், உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய் நீரை பயன்படுத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் போக நெல் சாகுபடி நடைபெறுகிறது.
நெல் விளைச்சல் அடைந்ததால் கடந்த 15 நாட்களாக அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்கதிர்கள் நிலத்தில் சாய்ந்தன.
சேதம் அடைந்தத பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.