தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்ட்வசமாக 4 பேர் உயிர் தப்பினர்.
கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழை காரணமாக நடராஜபுரம் பகுதியில் கண்ணன் என்பவரின் பழமையான வீடு இடிந்து விழுந்தது. வீட்டின் சமையலறை மற்றும் வெளிப்புறப் பகுதி இடிந்து விழுந்த நிலையில், படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்த கண்ணன் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். .