திண்டுக்கல் பேருந்து நிலைய வளாகத்தில் கொட்டும் மழையில் மதுபோதையில் படுத்து உறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் பரவலாக கனமழை பெய்தது, அப்போது பேருந்து நிலையத்திற்குள் மதுபோதையில் சென்றவர் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சாலையின் நடுவே படுத்து உறங்கினார்.
இதனால் பேருந்துகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை தூக்கி சாலையோரமாக அமர வைத்தனர்.