வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்து மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டின் ஆலோசகர் முகமது யூனஸ் முடிவு செய்துள்ளார்.
வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, அங்கு இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்நிலையில், வங்கதேச அரசின் ஆலோசகராக பதவியேற்ற முகமது யூனஸ், இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்துள்ளார்.
இந்து மாணவர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் முன்வந்துள்ளார். முன்னதாக வங்கதேசத்தில் இந்துக்களின் உரிமைகளைக் காக்க சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தி, 8 அம்ச கோிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.