பல்வேறு முறைகேடு புகாரில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்தது.
புனேயை சேர்ந்த அவர், பல்வேறு முறைகேடுகளை செய்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும், விதிகளை மீறி தனியார் வாகனத்தில் சைரனுடன் வலம் வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்வாறு அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதால், பூஜா கேத்கரின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.