குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பும், டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கும் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்கின்றனர்.
இதையொட்டி, அமைப்பு ரீதியாக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்வதாக எலான் மஸ்க் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், டிரம்பிடம் கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால், அதை எக்ஸ் வலைதளத்தில் தன்னை பின்தொடர்பவர்கள் பதிவிடலாம் என்றும், இந்த விவாதத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.