முஃபாசா: தி லயன் கிங் படத்தின் ஹிந்தி பதிப்பிற்காக நடிகர் ஷாருக்கான் தனது மகன்கள் ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து டப்பிங் பேசியுள்ளார்.
முஃபாசா கதாபாத்திரத்திற்கு ஷாருக்கானும், சிம்பா கதாபாத்திரத்திற்கு ஆர்யன் கானும், முஃபாசாவின் இளைய வயது கதாபாத்திரத்திற்கு ஆப்ராம் கானும் டப்பிங் பேசியுள்ளனர்.
ஒரு தந்தையாக முஃபாசாவுடன் தன்னை தொடர்புப்படுத்திக் கொள்ள முடிவதாக ஷாருக்கான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.