அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் ‘கோன் பனேகா க்ரோர்பதி’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 16-வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதற்கான விளம்பரத்தை சோனி லைவ் வெளியிட்டுள்ள நிலையில் படப்பிடிப்பானது கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில், ரசிகர்களிடையே விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புதிய விதிகள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.