புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
காமராஜர் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு முறையான சாதி சான்றிதழ் இல்லாததால் மேற்படிப்பு படிக்க முடியாத சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களுக்கு ஆதியன் இன சாதி சான்றிதழை வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.