புதுக்கோட்டை மாவட்டம், வடக்கு அம்மாபட்டினத்தில் உள்ள இறால் பண்ணையை அகற்றக்கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வடக்கு அம்மாபட்டினத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவரான கணேசன் என்பவர் மழை நீர் வடிகால் வாய்க்கால்களை ஆக்கிரமித்து இறால் பண்ணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மழைக் காலங்களில் நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் அப்பகுதி பொதுமக்கள் நோய்த் தொற்றால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரை அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.