திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் தோட்டத்துக்குள் புகுந்த இளைஞரை கள்ளத் துப்பாக்கியால் சுட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
சிறுமலை தாளக்கடையை சேர்ந்த வெள்ளையன் என்பவர், அங்குள்ள தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தோட்ட உரிமையாளர் சவேரியார் என்பவர், தமது கள்ளத்துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், படுகாயமடைந்த வெள்ளையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சவேரியாரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், கள்ளத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.