திருநெல்வேலி மாவட்டம், பாப்பான்குளத்தில் 5 ஆயிரத்து 191 கிலோ கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 495 வழக்குகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
அவற்றில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 141 வழக்குகளும், மதுரை புறநகர் மாவட்டத்தில் 95 வழக்குகளும், மதுரை மாநகரத்தில் 75 வழக்குகளும், தேனி மாவட்டத்தில் 57 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 ஆயிரத்து 191 கிலோ கஞ்சா தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டன.