வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் செல்போன் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே விநாயகம் என்பவர் செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
இவர் வழக்கம்போல் தமது கடையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்து சிதறி கடை முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இதனையடுத்து, உடனடியாக கடையில் இருந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். இதில்,அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.