ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்திக்கும் என கருதப்பட்ட நிலையில் நேற்று பெரிய அளவில் பாதிப்பின்றி வர்த்தகம் நிறைவு பெற்றது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமத்தை குறிவைத்து வெளியிட்ட அறிக்கையால், அவருடைய பங்கு மதிப்பு கடும் சரிவை சந்தித்ததுடன், இந்திய பங்குச் சந்தையும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் அதானி குழுமம் மற்றும் செபி அமைப்பை குறிவைத்து அண்மையில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இதனால், இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என கருதப்பட்டது.
இந்த சூழலில் நேற்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை சிறிது நேரத்தில் ஏற்றம் பெற்றது. மேலும், வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. இதன்மூலம் இந்திய பங்குச் சந்தை மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழக்காமல் முதலீடு செய்திருப்பது தெளிவாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பங்குச் சந்தை நிபுணர்கள், செபி தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைகளை இந்திய பங்குச் சந்தை புறம் தள்ளியது எனத் தெரிவித்தார்.