விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சொத்துக்காக சகோதரியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த பாஞ்சாலி என்பவர் தங்களது குடும்பத்துக்கு சொந்தமான 3 வீடுகளை பராமரித்து வந்ததால் அவற்றுக்கு உரிமை கோரியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அவரது சகோதரர் ரமேஷ் என்பவர், கடந்த 2022-ம் ஆண்டு பாஞ்சாலியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ரமேஷூக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.