சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திரங்கா யாத்திரா என்ற பெயரில் இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதேபோல டெல்லி பாரத் மண்டபத்தில் “ஹர் கர் திரங்கா” பிரச்சாரத்தின் கீழ் தேசிய கொடியை ஏந்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
மேலும், நாகாலாந்தின் திமாபூரில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியை பாஜக தேசிய செயலாளர் அனில் ஆண்டனி, பாஜக தலைவர் பெஞ்சமின் யெப்தோமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.