தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126 புள்ளி 28 அடியை எட்டியது.
இதனையடுத்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் பெரியகுளம், வடுகபட்டி,
மேல்மங்கலம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.