விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆணின் தலையை துண்டித்து மர்ம நபர்கள் பாலத்தில் வைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அய்யனார் கோவில் சாலையில் உள்ள முடங்கியாற்றுப் பாலத்தின் சுவற்றில் அடையாளர் தெரியாத நபரின் தலை இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பாலத்தில் இருந்த ஆணின் தலையை மீட்டனர். கொலை செய்யப்பட்ட நபர் 50 வயது மதிக்கத்தக்கவராக இருக்கலாம் என சந்தேகம் எழும்பியுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அமைந்துள்ள பாலத்தின்மீது ஆணின் தலை துண்டித்து வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.