நாமக்கல் மாவட்டம், சந்தைப்பேட்டை புதூரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கணக்கில்வராத சுமார் 1 லட்சத்து 69 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த விடுதியில் விடுதி காப்பாளர்கள் உள்பட மொத்தம் 10 பேர் மட்டுமே பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது விடுதிக் காப்பாளர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில் காலிப்பணியிட நியமனத்துக்காக வசூலித்ததும் தெரியவந்துள்ளது.