இந்த சினிமா இண்டஸ்ட்ரியில் இயக்குனர்கள் ஆவது ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி, மலையாள நடிகை அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கொட்டுக்காளி’. ‘கூழாங்கல்’ வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ஆக.23-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குனர்கள் லிங்கு சாமி, மிஷ்கின், வெற்றிமாறன் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய இயக்குனர் மிஷ்கின்,
ஒரு தாய்க்கு எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான். ஒரு தனிமையான பெண் தான் இந்த கொட்டுக்காளி. ஒரு வேளை வினோத் இடம் கேட்டு இருந்தால் இந்த உலகத்தை என் கதை மூலமாக மாற்ற வேண்டும் என்று கூறி இருப்பார் என்று நினைக்கிறேன்.
இந்த படத்திற்கு ஏன் கொடுக்காளி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த படத்திற்கு மியூசிக் டைரக்டர் இல்லை என்று இயக்குனர் கூறினார்.
பெரிய மயிரு மாதிரி பேசுறான் என்று உதவி இயக்குனர்களிடம் கூறினேன். இந்த படத்தை மக்கள் பார்க்க வில்லை என்றால் நான் நிர்வாணமாக கூட நிற்கிறேன். இப்போதெல்லாம் 16 வயதினிலே போன்ற படம் எடுத்தால் ஓடுமா என்று தெரியவில்லை அந்த அளவிற்கு மாறி விட்டது சினிமா.
நான் இளையராஜாவின் காலை தொட்டு முத்தம் கொடுத்தேன். அதன் பிறகு இந்த படத்தின் இயக்குனரின் காலை தான் முத்தம் கொடுக்க விரும்புகிறேன். ஒரு நல்ல கதை, நல்ல கதாசிரியர் தோற்கப்படுவதில்லை. சமூகத்தால் கொலை செய்ய படுகிறான். இப்போதெல்லாம் தமிழ் நடிகைகள் நல்ல படங்களில் நடிப்பதில்லை. படத்தில் எத்தனை பாடல்கள் என்று கேட்கிறார்கள். மோசமான காட்சிகளையும், படங்களையும் பார்க்கிறோம் தப்பில்லை, ஆனால் இந்த படம் தமிழ் சமுதாயத்தை கூறுகிறது. இதை விட அரசியலை விலாவரியாக பேசிய படத்தை பார்த்த தில்லை என்று கூறினார்.
மேடையில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன்,
இந்த படம் சாதியத்திற்கு எதிரான படம், பெண்மை பேசும் படம், இதை சாதிக்கிறது சாதன விசயம் இல்லை. அதை ரொம்ப எளிதில் செய்து இருக்கிறார். படம் பார்க்கும்பொழுது அந்தப் பெண்ணிற்கு என்ன நடக்கப்போகிறது என்று தான் நினைக்க வைக்கும், நேர்மையான தேவையான சிறந்த கதை தான் கொட்டுக்காளி என்று தெரிவித்தார்.
மேடையில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,
நான் உலக சினிமாவை எல்லாம் பார்த்ததில்லை, கூழாங்கல் படம் பார்த்தேன் எனக்கு பிடித்திருந்தது. Quandram விருது வழங்கும் விழா புதிய இயக்குனர்களுக்கான விருது அதில் வினோத் ராஜ் கூழாங்கல் படத்திற்காக தேர்வு செய்திருந்தனர்.
இதற்கு முன்னர் யார் யார் இந்த விருதை வாங்கி இருக்கிறார்கள் என்று கேட்டேன் அப்போது கிறிஸ்டோபர் நோலன் வாங்கி இருக்கார் என்று கூறினார்.
கிறிஸ்டோபர் நோலன் வாங்கின அந்த விருதை மதுரையில் பிறந்த
வினோத் ராஜ் இந்த படத்தை வாங்கி இருக்கும் பொழுது ஏன் அந்த இயக்குனரை கொண்டாட மறந்தோம் என்று நினைத்தேன்.
இந்த படம் எடுத்து வினோத் ராஜை கொண்டாடுவதற்காகவே ஒரு படம் எடுக்க வேண்டும் என்று இருந்தேன், அதுதான் கொட்டுக்காளி. நான் சினிமாவில் வந்ததற்கு ஒரு tribute ஆக இந்த கொட்டுக்காளியை பார்க்கிறேன்.
நிச்சயமாக ஒரு புது அனுபவத்தை இந்த படம் கொடுக்கும். இந்த படம் தியேட்டரில் ஓடி என்ன வசூல் செய்தாலும் சந்தோசம் தான். இப்படி ஒரு படத்தை மக்கள் பார்க்க வருவது சந்தோஷம்தான். இதற்கு மேலும் இது ரொம்ப டஸ்டு போன்ற படங்கள் நிறைய வரும் அதற்கு உதாரணமாக இப்படம் இருக்கும் என்பதில் பெருமை கொள்கிறேன்.
வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தால் தான் விடுதலை போன்ற படங்களில் சூரி எளிதில் நடித்தார். நான் கல்லூரி படிக்கும் பொழுது விக்ரம் அவர்களுக்கு சாமி, தூள், பிதா மகன் என hat trick வெற்றி அமைந்தது. அதேபோல் சூரிக்கும் கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 என hat trick வெற்றியாக அமையும் என்று நினைக்கிறேன்.
இந்த சினிமா இண்டஸ்ட்ரியில் இயக்குனர்கள் ஆவது ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. என் அண்ணன் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்ற மாதிரி என்று கூறினார்.
மேடையில் பேசிய நடிகர் சூரி,
இப்படி ஒரு படத்தில் நான் இருக்கிறேன் என்பதில் சந்தோசம். ஒவ்வொரு முறையும் இந்த சூரி இப்படி நடித்திருக்கிறார், அப்படி நடித்திருக்கிறார் என்று சொல்லும் பொழுது சிலிர்க்கிறது.
அமெரிக்காவில் அத்தனை இயக்குனர்கள், கொட்டுக்காளி படத்தை பார்த்தனர். கேள்வி கேட்கும் பொழுது yes yes yes yes என்று 4 முறை கூறினேன். அவ்வளவு தான். படம் நல்லா இருக்கு என்றனர். இந்த ஒரு படத்தை வைத்து பல நாடுகள் சுற்றி விட்டேன். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.