சிவகங்கையில் கோவில் திருவிழாவின்போது கதம்ப வண்டு கடித்து 3 வயது சிறுமி உள்பட 40 பேர் காயமடைந்தனர்.
சுந்தரநடப்பு கிராமத்தில் அமைந்துள்ள அழகுநாச்சியம்மன் கோயிலில் ஆடிமாத திருவிழா நடைபெற்றது. அப்போது ஆலமரத்திலிருந்த கதம்ப வண்டின் கூண்டு கலைந்து, அங்கிருந்த மக்களை கடித்துள்ளது.
இதில் 3 வயது சிறுவன் சாய் உள்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.