திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே மின் கம்பி உரசியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏலூர் பட்டி பகுதியில் உள்ள கோழி வளர்ப்பு குஞ்சு உற்பத்தி செய்யும் பண்ணையில் விக்னேஸ்வரன் என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கோழிப்பண்ணைக்கு தண்ணீர் விநியோகிப்பதற்காக டேங்கர் லாரி வந்துள்ளது. அப்போது தண்ணீர் முழுவதுமாக வெளியேறிவிட்டதா என்பதைக் காண லாரியின் மீது விக்னேஸ்வரன் ஏறியுள்ளார்.
அப்போது அவரது தலைக்கு மேலே சென்ற மின் கம்பி உரசியதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.