கோவை அருகே சாலை விபத்தில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.
பாப்பம்பட்டி அருகே மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் கல்லூரி பேருந்து, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் கல்லூரி பேருந்தில் பயணித்த 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து காரணமாக பல்லடம் – கொச்சி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.