தேனி மாவட்டத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன. இந்நிலையில் கம்பம் நகரில் சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை மற்றும் மகனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து இருசக்கர வாகனங்களை திருடி உதிரிபாகங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 13 இருசக்கர வாகனங்களை மீட்ட போலீசார், நால்வரை கைது செய்தனர்.