சேலம் சந்தையில் பாக்குகளின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து விற்பனையானது.
சேலம் பால் மார்க்கெட்டில் பாக்கு சந்தை இயங்கி வருகிறது. இங்கு வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பாக்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த வாரம் வரை 100 மூட்டைகள் வரை விற்பனைக்கு வந்த பாக்கு, தற்போது 70 மூட்டையாக குறைந்துள்ளது.
இதனால், கலிப்பாக்கு கிலோ 800 முதல் 900 ரூபாய் வரையிலும், தூள் பாக்கு கிலோ ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை அதிகரித்து விற்பனையானது.