பங்குச் சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆய்வறிக்கை வெளியிட்ட ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் தற்போது செபி அமைப்பிற்கும், அதானி குழும முறைகேடுகளுக்கும் தொடர்பிருப்பதாக வெளியிட்டிருக்கும் மற்றொரு ஆய்வறிக்கை நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
இது போன்ற ஆய்வறிக்கைகளை வெளியிடும் ஹிண்டர்பர்க்கின் நோக்கம் என்ன ? ஆய்வறிக்கைகளின் பின் இருக்கும் புதிர்கள் என்ன ? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவோட நியூயார்க் நகரத்துலருந்து இயங்கக்கூடிய ஹிண்டர்பர்க் அப்படிங்கிற நிறுவனம், வணிகச் சந்தையில பங்குகளோட விலை குறையுறப்ப அத முன்கூட்டியே கணிச்சு, அது மூலமா தரகர்கள பயன்படுத்தி நிறைய லாபம் சம்பாதிக்கக் கூடிய தனியார் நிறுவனம் தானே தவிர பொருளாதார ஆய்வறிக்கைகளை தயாரிக்கிற நிறுவனமோ, மக்களுக்கு நல்லது செய்ற தன்னார்வ தொண்டு நிறுவனமோ கிடையாது.
ஆண்டர்சன் அப்படிங்கிற தனி நபரால 2017ம் ஆண்டுல தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பங்குச் சந்தையில ஏற்படுற முறைகேடுகளை அம்பலப்படுத்துறது தான் தங்களோட நோக்கம்னு சொல்லிக்கிட்டாலும், உலகத்துல இருக்கக் கூடிய பெரிய பெரிய கம்பெனிகளை குறிவைச்சு, அடிப்படை ஆதராமற்ற அறிக்கைகளை வெளியிட்டு, அது மூலமா வருமானம் பாக்குறது தான் அந்த நிறுவனத்தோட இன்னொரு பக்கம்னும் பரவலா பேசப்படுது.
போன வருசம் ஜனவரி மாசத்துல. அதானி குழுமம் முறைகேடுகள்ல ஈடுபட்டுருக்கதா ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்ன வெளியிட்டுச்சு. இது தொடர்பா நடந்த வழக்குகளை விசாரிச்ச உச்சநீதிமன்றம், ஹிண்டர்ன்பர்க் சொல்லியிருக்கக் கூடிய குற்றச்சாட்டுகள் எல்லாமே போலியானதுனு சொல்லி வழக்குகளை தள்ளுபடி செஞ்சுருச்சு.
இந்த நிலையில தான் செபினு சொல்லக்கூடிய இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தோட தலைவருக்கும் அவரோட கணவருக்கும் அதானி குழுமத்திற்கும் தொடர்பிருக்குறதா புகார் சொல்லி இன்னொரு அறிக்கையை வெளியிட்டுருக்கு அதே ஹிண்டர்ன்பார்க் நிறுவனம்.
ஏற்கனவே போனவருசம் ஹிண்டர்ன்பர்க் வெளியிட்ட ஆய்வறிக்கைகள் எல்லாமே போலினு உச்சநீதிமன்றமே தீர்ப்பு சொன்ன நிலையில, அதானி மாதிரியான பெருநிறுவனங்களை தொடர்ந்து குறிவைச்சு வெளியாகுற இதுமாதிரியான ஆய்வறிக்கைகள் பணத்தை மிரட்டி பிடுங்குறதுக்கா ? இல்ல பங்குச் சந்தைகள் மூலம் பணத்தை சம்பாரிக்கிறதுக்கா? அப்படிங்கிற கேள்வியை எழுப்புது.
ஹிண்டர்ன்பர்க்கோடு ஒவ்வொரு ஆய்வறிக்கை வெளியாகுற போதும், அந்த அறிக்கையை முழுசா கூட படிக்காம, மத்திய அரசு மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்குறது மூலமா, ஹிண்டர்ன்பர்க் அறிக்கையை தங்களோட அரசியல் நோக்கத்துக்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்துறாங்களோ அப்படிங்கிறத சந்தேகத்தையும் ஏற்படுத்துது.
உலகப் பொருளாதாரமே மிக மோசமான நிலையில இருந்தாலும், இந்திய பொருளாதாரம் மட்டும் கணிசமா வளர்ந்து கிட்ட வர இந்த நேரத்துல, எந்தவிதமான சட்டப்பூர்வ அங்கிகாரம் இல்லாத தனியார் நிறுவனத்தோட ஆய்வறிக்கையை ஆதரிக்கிறது மூலமா, அந்த நிறுவனத்தோட சேர்ந்துகிட்டு பெரியளவிலான பொருளாதார குழப்பத்தை ஏற்படுத்தி வெளிநாட்டு முதலீடுகள இந்தியாவுக்குள்ள வரவிடாம தடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முற்படுறாங்களா ? அப்படிங்கிற கேள்வி நாட்டு மக்கள் மத்தியில பலமா எழுந்திருக்கு.