போலி சான்றிதழ் விவகாரத்தில் வேலூர் மாவட்டம் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனாவை மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவரான கல்பனா, ஆதிதிராவிடர் என போலி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றதாக வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால், அவரது சாதி சான்று ரத்து செய்யப்பட்டு, ஊராட்சி மன்றம் தொடர்புடைய காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், 2 ஆண்டுகள் கழித்து தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து கல்பனாவை தகுதி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.