கோவை சூலூர் விமானப்படை தளத்தில் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
சூலூர் விமானப்படை தளத்தில் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய தரங் சக்தி-2024 பன்னாட்டு விமானப் பயிற்சியில் இந்தியாவுடன் இணைந்து ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் பயிற்சி ஒத்திகைகளை மேற்கொண்டன.
இந்நிகழ்வில் இந்தியாவின் தேஜஸ், ஜெர்மனியின் typhoon உள்ளிட்ட உயர் ரக போர் விமானங்களின் பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. இந்நிலையில் இரண்டு நாட்கள் நடைபெறும் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
62 அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெறும் இந்த கண்காட்சியில் பொதுத்துறை மற்றும் தனியார் ராணுவ தளவாட உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியை பார்வையிட ராணுவப்படையினர் மற்றும் தளவாட உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.