திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் அருகே பர்னிச்சர் கடையின் ஊழியரை மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
காக்களூர் – ஆவடி புறவழிச்சாலையில் ஸ்ரீனிவாசா பர்னிச்சர் என்ற வீட்டு உபயோக பொருட்கள் கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நந்தகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி இரவு கடைக்குச் சென்ற மர்ம நபர்கள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு நந்தகுமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள கடை ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.