ஏலியன் ரோமுலஸ் என்ற ஹாலிவுட் படம் வரும் 23ம் தேதி தமிழ் மொழியில் வெளியாகவுள்ளது.
ஈவில் டெட், டோண்ட் ப்ரீத் படங்களை இயக்கிய ஃபெடே அல்வாரெஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். டிவென்டியத் செஞ்சுரி ஸ்டூடியோஸ் இந்தியா, இந்தப் படத்தை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வரும் 23-ம் தேதி வெளியிடுகிறது.
சயின்ஸ் பிக் ஷன் ஹாரர் படமான இது, உண்மையிலேயே திகிலூட்டும் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.