நடிகர் ஷாருக்கான் தென்னிந்திய சினிமாவை பற்றி பாராட்டி பேசியுள்ளார். சுவிட்சர்லாந்தில் லோகார்னோ திரைப்பட விழா நடைபெற்றது.
அப்போது ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து பேசிய அவர், சினிமா ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், தென்னிந்திய சினிமா மிகவும் அற்புதமானது என்று பாராட்டி உள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிட்ட பாணி உள்ளது என்றும், தான் அதை மிகவும் ரசித்ததாகவும், அது தனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.