TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருந்தது. முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தபோது அதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்தார்.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் ஆறு ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.