மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மாணவி கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சந்தீப் போஷ், தனது பதவியை ராஜினாமா செய்த சில மணிநேரத்தில், வேறொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டதை விமர்சித்தார்.
இதன் மூலம் அம்மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக கூறிய அவர், இந்த வழக்கில் மேற்கு வங்க போலீஸாரின் விசாரணை மீதும் சந்தேகத்தை எழுப்புவதாக குறிப்பிட்டார்.